Thursday, November 10, 2016

சமூகசேவை



வலக்கைக்கொடுப்பது
இடக்கைக்கு தெரியாது அன்று!
வலைப்பதிவு செய்தபின்னே
செய்யப்படும் சேவைகள் இன்று!
அசுத்தம்
செய்தவர்களே ஆர்வமாய்ச் சென்றனர்
கடற்கரை சுத்தம் செய்யும் பேரணிக்கு!

மரம்வளர்ப்போமென்று மேடைக்கொள்கை!
மரம்விற்போமென்று வியாபாரக்கொள்கை!
முகாமிலோ இரத்ததானம் செய்ய ஆர்ப்பரிப்பு !
விபத்திலோ முதலுதவி வண்டியை அழைப்பதற்கே பரிதவிப்பு!


முதலாளித்துவம் மொழியும் முதலாளியின் வீட்டில்
முன்னுாறு வேலைக்காரர்கள்!
மூன்றாம் பாலினத்தவரின் முன்னேற்றத்தில்
முன்னொருபேச்சு,பின்னொருபேச்சு!

ஆதரவற்றகுழந்தைகளுக்கு அன்னம் வேண்டாம்!
அறிவுச்செல்வமே வேண்டும்!
மீன்கள் தேவையில்லை!
மீன்பிடிக்கத்தூண்டில்களே தேவை!
சேவை,
சமூகவளைத்தளங்களுக்காக அல்ல!
சமூகத்திற்காக!

No comments:

Post a Comment