Tuesday, November 22, 2016

ஹைக்கூ வகைமைகள் - லிமர்புன்



கதை+லிமரைக்கூ = லிமர்புன்

 

எடுத்துக்காட்டு 1: 
 


புகழின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் பொழுது தெரியாதயவருக்கும் , 
தூரத்து உறவினருக்கும் நெருங்கிய சொந்தங்களாகவும்,
பழக்கப்பட்டவராகவும் அறியப்படுகிறோம்.
அதுவே புகழ் குன்றுபட்ட வேளையில் நன்கு அறிந்த சொந்தங்களும் 
நம்மை அறியாதவர் என்பர்
 
தூரத்து உறவும் நெருங்குமே
நெருங்கிய உறவும்  விலகி ஓட
புகழின் கண்ணாமூச்சி ஆட்டமே!
 
எடுத்துக்காட்டு 2:  
ஜாதி,மத,இனம் என்ற பலமுட்களுக்கு நடுவே காதல் பூ பூத்து 
நறுமணம் வீசும்பொழுது,அப்பூக்களை அன்பெனும் நூலில் அழகாக
திருமண மாலையாக்குவதும்,பூக்களை நசுக்கி எரிவதும் பெற்றோர்
கையிலேயே உள்ளது. 
 
காதல் சேர்க்கும் இருமனம் 
ஆணவம் அழித்து அன்புடன் பெற்றோர் 
செய்து வைக்கும் திருமணம்


எடுத்துக்காட்டு 3:  


பண்டைக் காலத்தில் செழிப்பான வழியில் பயிர்களை பயிரிட்டு விளைவித்தனர்.பயிர்கள் நன்கு உயரமாக வளர்ந்து கீழே தேங்கிய நீரில் மீன் வளர்ப்பும் நடைபெற்றது.
நாமோ பசுமைபுரட்சி என்ற பெயரில் விளைச்சலுக்காக விவசாய முறையை மாற்றியுள்ளோம்.

ஆறடி நெற்கதிரின் வயல்
வளமான விவசாய முறையில் தேங்குதண்ணீரில்
துள்ளித் திரியும் கயல்!
 

No comments:

Post a Comment