வீட்டினுள்
விழுந்தன
வளர்பிறை வெண்மதிகள்
வெட்டிய நகங்கள்!
வளர்பிறை வெண்மதிகள்
வெட்டிய நகங்கள்!
குடிக்க வேண்டாமே
பூச்சிக்கொல்லி மருந்து
அயல்நாட்டுக் குளிர்பானம்!
அயல்நாட்டுக் குளிர்பானம்!
கருவறை பாதிப்பு
கோயிலுக்கு குந்தகம்
கர்ப்பப்பை நீக்கம்!
இறைவியும் இறைவனும்
இரண்டற இணக்கம்
அரவாணி!
இதழ்களின் மேல்
கருவண்டு
மச்சம்!
நெருங்க வில்லை
ஏழ்மை நிலை!
அறைந்ததிற்குப் பரிசு
முத்தம்
குழந்தைக்கு பெற்றோர்!
இயற்கை தந்த வரம்
ஏழ்மை நிலை!
அறைந்ததிற்குப் பரிசு
முத்தம்
குழந்தைக்கு பெற்றோர்!
இயற்கை தந்த வரம்
உறை கூழ்
நுங்கு!
கூட்டங்கூட்டமாய்
திருடினர் உள்ளாடை
மணல் கொள்ளை!
கும்பிடுவது கோயிலுக்குள்
வெறுப்பது வெளியே
அர்த்தநாரீஸ்வரர்கள்!
காதல் கவிதை போட்டி
தோற்றும் வென்றாள்
காதலன் இதயம்!
நுங்கு!
கூட்டங்கூட்டமாய்
திருடினர் உள்ளாடை
மணல் கொள்ளை!
கும்பிடுவது கோயிலுக்குள்
வெறுப்பது வெளியே
அர்த்தநாரீஸ்வரர்கள்!
காதல் கவிதை போட்டி
தோற்றும் வென்றாள்
காதலன் இதயம்!
தூரத்து உறவினரும்
நெருங்கிய உறவு
புகழின் உச்சம்!
பார்க்க முடியவில்லை
உடுத்திவிட்டேன் ஆடையை
நிர்வாண பொம்மை!
கைநிறைய காசு
ஒருநாள் கூத்து
தேர்தல் திருவிழா!
ஓடோடி வந்தாள்
தடுத்து நிறுத்தினான்
அணைகள்!
அழகில் மயங்கி
முத்தம்
சிரித்தது குழந்தை!
சுந்தர முகம்
சொக்க வைக்கும்
மழலைச் சிரிப்பு!
ௐர் ஆணின் மீது
மூவருக்கு ஆசையா
தாய் மனைவி மகள்!
பெண்ணிடம்
மூவர் நேசம்
தந்தை கணவன் மகன்!
சிரித்த நேரங்கள்
கனத்தது நெஞ்சம்
கல்லூரிக் காலங்கள்!
அழுத நேரங்கள்
அசட்டுச் சிரிப்பு
பள்ளிக்கூட நினைவுகள்!
தேர்வில் நூறுமதிப்பெண்
அடித்தாள் அம்மா
தமிழில்இருதாள்களும் சேர்த்து!
மனிதநேயம்
மலரும் வளரும்
மகிழ்வித்து மகிழ்!
சந்தேகமே இல்லை
நான் அறிவாளி
முட்டாள்களுக்கு நடுவே!
தேர்வுமுடிவில் தேர்வுஎண்
காணாமல்போனாலும் கண்டுபிடித்தேன்
தன்னம்பிக்கையை!
பூக்களுக்கும் பயணச்சீட்டா
பயணம் செய்வதற்கு
தாயின் பிரயாணம்!
ஆசிரியர்களும்
கண்மருத்துவர்களே
அகக்கண்களை திறப்பதனால்!
ஓட்டைபேருந்துக்கும் மழைக்கும்
ஒளிந்துகொள்ள குடையைவிரித்தேன்
குடைக்குள் மழை!
தலைவணங்குகிறேன்
பெற்றதற்காக அல்ல
பெண்ணாக பெற்றதற்கு!
வெந்தாமரை செந்தாமரையானது
அம்மாவின் அழகுமுகம்
மதிப்பெண்களை கண்டவுடன்!
அயல்நாட்டில் ஒட்டகமும்
உள்நாட்டில் மாடும்மேய்ப்பு
வேற்றுமையிலும் ஒற்றுமை!
தேன்குடிக்கும் வண்டை
பிடிக்கவில்லை பிடித்திருக்கிறது
இதழின்மீது மச்சம்!
முள் சனியனானது
காதலியின் பாதங்களை
பதம்பார்த்ததால்!
மனைவி சனியனானால்
முள் அவளின் பாதங்களை
பதம்பார்த்தாலும்!
பாசப்புதையலை திறந்தேன்
காதல்சாவி கொண்டு
கணவன் இதயம்!
பணம்பிடுங்கும்
கூடாரங்கள்
பள்ளிக்கூடங்கள்!
பஞ்சும் நெருப்பும்
கைபேசியில் பற்றவில்லை
காதலர்கள் உரையாடல்!
கள்வர்களும்
கல்விதந்தைகள்
கல்லூரிகளால்!
உங்கள் கவிதைக் குளத்தில் கல்லெறிந்து உண்டாக்கும் அலைகள் வேண்டாம் . வாழ்த்து மலர்கள் தூவுகிறேன்.அப்போதும் மெல்லிய அலையசைவுகள் மணம் பரப்பும் .பொறியியல பட்டதாரியின் கவிதைப் பயணம் தொடரட்டும் ,,,,,!
ReplyDeleteமுனைவர் .மன்சூர் .
Thanks for ur guidance and motivation sir....will improve myself
ReplyDelete