Thursday, November 10, 2016

ஹைக்கூ கோட்டையாகும் புதுக்கோட்டை - மு.முருகேஷ்



ஹைக்கூ கவிதைகள் எழுத ஆர்வம்கொண்ட அனைத்து ஆர்வலர்களுக்கும் இப்புத்தகம் கைகொடுக்கும் கையேடாக அமைகிறது.

நம்மை சுற்றியுள்ள இயற்கை இன்பங்களையும்,சமூக அவலங்களையும்,உறவுகளின் உன்னதங்களையும் விநாடிகளில் விளக்க விளக்காய் வழி காட்டுகின்றது.

புத்தகத்தில் பன்னீர் தெளித்தது போல் தெளிக்கப்பட்ட தரம்மிகுந்த எடுத்துக்காட்டுக் கவிதைகள் நம் கவிதைகளும் எடுத்துக்காட்டும் விதமாக அமைய வேண்டுமென்ற ஆவலை அள்ளித்தெளிக்கின்றது.

திறன் கொண்ட தன்குழந்தையை மட்டும் தரணிஅறியச்செய்யாமல்
துடிப்பு மிகுந்த மாற்றான் குழந்தைகளையும் பாருக்கு அறிமுகம் செய்யும் தாயுமானவராகிறார் ஆசிரியர்.

நெற்றிக்கண்திறப்பினும் குற்றம்குற்றமே என்று மூத்தகவிஞர்களாயினும் மறுப்புரை கொடுத்தது கவிஞர்களுக்கு திண்ணியநெஞ்சம் வேண்டும் என்பதை தெளிவுரச்செய்கிறது.

தொழில்நுட்பம் வளர்ச்சியடைய காத்திருந்த காலத்திலும் பொக்கிசமாய்  படைப்புகளை பாதுகாத்தது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.

No comments:

Post a Comment