Tuesday, November 22, 2016

ஹைக்கூ வகைமைகள் - லிமரைக்கூ



முதல்,மூன்றாம் வரிகள் மூவசை
இரண்டாம் வரி மட்டுமே நான்கு அசைகள்
இதில் அசை குறில்நெடில்,நெடில்குறில்  ஈரசை மூவசை வரும்
முதல்,மூன்றாம் வரிகளின் இறுதியில் ஒத்த ஓசை வரும் இயைபு கொணர்க


எடுத்துக்காட்டு 1: 
 

உயிரும் போகும் முன்பு
உணர்வாய் மழலை தருகின்ற மட்டிலா
வணிகமிலா அந்த அன்பு



எடுத்துக்காட்டு 2: 
 


கள்வர்களும் கல்வித் தந்தையோ
பணம் பிடுங்கும் சொகுசு கூடாரத்தால்
ஏற்பட்ட புரியாத விந்தையோ!
 


எடுத்துக்காட்டு 3: 
 


மருத்துவர் திறக்கும் புறக்கண்
லட்சமே நோக்கம் என்பதால் பயன்தரும்
ஆசான் திறக்கும் அக்கண்




எடுத்துக்காட்டு 4: 
 


உச்சம் தொட்ட கோபக்கணை
சேட்டையை சமர்த்தாக அணைத்தாய் அன்பின்
உச்சி முகர்ந்த முத்தகணை




எடுத்துக்காட்டு 5: 
 


இயற்கையின் இன்றியமையா பங்கு
செயற்கை உறைகூழிடம் சீரழிவு பெறாது
நலம் நாடிட நுங்கு
 
எடுத்துக்காட்டு 6:   
 
சொட்டுநீர் சிறிது கடலில்
காதலியின் காதலில் மயங்கிய காதலனுக்கு
துளியும் கண்நிறைக்கும் காதலில்!


No comments:

Post a Comment