Thursday, November 10, 2016

போக்குவரத்து பாதுகாப்பு



இருக்கைப்பட்டையின் அணைப்பு
நெருக்கமானவர்களை நினைவூட்ட
தலைஅலங்காரத்தைவிட தலைக்கவசம்
சிரத்தையுடன் சிரம்காக்க
வேகத்தைவிட விவேகம்
வாழ்க்கைப்பந்தயத்தில் வெற்றிதர
வெட்டிவீராப்புகாட்டும் வாகனபடிகட்டுப்பயணம்
மோட்சம் கொடுத்திடுமே!

அவசர ஊர்திகளுக்குப்பின்
வழிதேடாமல்  வழிகொடுத்து
விதிகளை பின்பற்றி
வீண்அபராதங்களை தவிர்த்து
சாலைகோட்டினை தாண்டாமல்
கேடினை தவிர்த்திட்டு
விளக்குகளின் விளக்கங்களைபின்பற்றிட
நன்மையுடன்நல்வழியும் காட்டிடுமே!

பாதசாரிகளை பார்த்து
சாரதிகள் வழிவிட்டு
சுரங்கபாதையும் பாலமும்
பாதுகாப்புபாதையைக் காட்ட
சாராயத்தின்பிடியில் சாரதிகள்தப்பி
ஊர்திகளை  ஓட்ட
ஒழுங்காய்சமிக்ஞை கற்றே
ஓட்டுநர்உரிமம் பெற்றிடலாமே!
வாகனம்ஓட்டுகையில் கைப்பேசியில்பேசி 
சொர்க்கவாயிலை  திறக்கச்சொல்ல வேண்டாமே!

No comments:

Post a Comment