தேன்தமிழின் சுவையை கல்விவழி கடைந்து எடுத்து ஆராய்ந்து,சுவைத்து,மகிழ்ந்து மற்றவர்களுக்கும்
மனதார திகட்ட திகட்ட தேனமுதம் உபசரித்திருக்கிறார்
புலவர் மு.அப்துல் மாலிக்.
கவிஞரின் தித்திக்கும் கவிதைகளை திரும்பத்திரும்பச் சுவைத்தாலும்
தித்திப்புடன் திகட்டாமல் வேறுவேறு சுவையைத்தருகிறது.
புலவர் உபசரித்துள்ள விருந்தில் நாம் ஒரு கவிதையை சுவைக்கும் பொழுது, நமக்கு
பிடித்த சுவையில் சவைத்து விடுகிறோம்.ஆனால்
கவிஞரோ இன்னும் கொஞ்சம் சுவைக்கச் சொல்லி சில தேன்துளிகளை
தெளிக்க அக்கவிதையோ பலவிதமான சுவைகளை அள்ளிஅள்ளித்
தருகின்றது.
வார்த்தைகளில் விளையாடி வர்ணஜாலங்கள் செய்து, எதுகை மோனைகளால் தோரணம் கட்டி
வாசிப்பவருக்கு விருந்துடன், உவமை,உருவங்களால் உள்ளத்திற்கு உவகை தந்து மனநிறைவும்
கொடுக்கிறார்.
மனதிற்கு விருந்தாக மகத்தான கவிதைகளையும்,
கண்ணிற்கு விருந்தாக கருத்துள்ள படங்களை பதித்து ஆழ்மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
கண்ணிற்கு விருந்தாக கருத்துள்ள படங்களை பதித்து ஆழ்மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
என்னை ஈர்த்த கவிதைகள்:
'கால் வயிற்று சோற்றுக்கு
ஏங்கிய வெட்டியான் முகத்து
ஆனந்தக் கண்ணீர்
உள்ளோர் வீட்டு இல்லார் மரணம்'
'பகலவன் வருவான்
இவன் செல்வான்
பகலவன் போவான்
இவன் வருவான்
புகழகம் அவன்
இவன் எனக்கு
பூக்களின் மலர்ச்சியில்அவன்
இவனெனுக்கு'
சமுதாய
சீர்கேடுகளை சீர்செய்யும் சத்தான மருந்துகளை தேன்தமிழ் கலந்து சுவையுடன்
கொடுத்துள்ளார் கவிஞர்.
ஆகாய நட்சத்திரங்கள் அனைத்துமே நெஞ்சை கொள்ளும்பொழுது சில விண்மீன்களை மட்டும்
வர்ணித்தால் மற்றவை முகம் சுளித்துக்கொள்ளும் என்பதனாலும் இதயதுடிப்பில் 72
துடிப்புமே இதயம் கவர்ந்தவையாக இடம்பெற்றதை இன்பத்துடன் பதிவிடுகிறேன்.
106 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் இராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில எண்பது ரூபாய் மதிப்பில வெளியிட்டுருக்காங்க. கவிதைகள் படிக்க ஆரம்பிச்சிருக்கறவங்க, தமிழோட சுவைய தெரிஞ்சுக்கனும்னு நினைக்கறவங்க நிச்சயமா எளிமையான கவிதைகள் நிரம்பியிருக்கும் இந்த புத்தகத்தைப் படிக்கலாம்.

பெயரே தூக்கல்.. இதில் உங்கள் மதிப்புரை வேறு இன்னும் தூக்கலாக இருக்கிறது.. அந்த புத்தகத்தை வாங்க ஆவல் உங்கள் மதிப்புரையால் பிறக்கிறதென்பது உண்மை.
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள்
ReplyDelete