Friday, November 11, 2016

கருப்பு பணம்

கருப்புநிறத்தில் காட்டப்படும் வெறுப்பு
கருப்புபணத்தில் காட்டப்படாத மாயமென்ன!
வெள்ளைநிறமாய் மாறும் மோகம்
மனத்தைமட்டுமல்ல பணத்தையும்
பீடித்துகொண்ட பரபரப்பென்ன!
குணம் குப்பையிலேயென்று குதூகலம்கொண்டாயே
பணமும் குப்பைக்குச் சென்ற பரிதாபமென்ன!

நிழல்வாழ்க்கையின் நிகழ்த்தப்பட்ட
சீர்திருத்தங்களால் சிலிர்ப்பு!
நிஜவாழ்க்கையில் நடத்தப்படும்
நிதர்சனங்களால் சலிப்பு!
பணமில்லாதவன் பாயில் பகுமானமாய் படுத்துறங்க
பணமேமெத்தையாய் மாறினாலும்
தூக்கமேதூரமாய் ஓடியதென்ன!

பணத்தால் வீழ்ந்தவர்கள்
கோடிபேர் இங்கிருக்க
கோடிகோடி பணமும் வீழ்ந்த விந்தையென்ன!
கணக்காளரே கடவுளென
கள்ளக்கணக்குகளுக்குப் பரிகாரம்தேடுவதென்ன!
வாராக்கடன்களும் வீடுதேடி
வரிசையில் வந்ததென்ன!
வருமானத்திற்கு வரிஏய்ப்பு
வகையாய் செய்திட்டதால்
வருத்தமேதும் கொள்ளாமல்
வள்ளலாய் வாழ்ந்திடலாமே!

5 comments:

  1. கறுப்புதான் அவர்களுக்கு பிடித்த வண்ணமோ?
    கறுப்பை வெள்ளையாக்க Fair&Lovely இங்கில்லையே?
    4000 க்கு வரிசையாக நிற்பவர்கள் வரி சரியாக கட்டியவரே?

    கவித்தோழி கவித்தோணி
    பவனி செய்யட்டும் அவனியில்...


    நெல்லை ஆடலரசன்@Natarajan

    ReplyDelete