அபூர்வசகோதரர்கள் படத்திற்கு சென்றீர்கள் - நான்
ஆண்குழந்தை இல்லை என்பதனால்!
அழகாய் இருந்ததனால் பின்பு
ஆசை கொண்டு அன்பை பொழிந்தீர்கள்!
அனைத்து போட்டிகளிலும்
ஆர்வமுடன் கலந்து கொள்ளச் செய்தீர்கள்!
தோல்விகளில் துவண்டபோதிலும்
லட்சக்கணக்கான விந்திலிருந்து
லட்சியங்களை நிறைவேற்ற வந்தேனென்றீர்கள்!
பொறியியல் கலந்தாய்வில்
பொங்கிவந்த கண்ணீரில்
பிரிவில் பரிவு காட்டீனீர்கள்!
சிங்காரச்சென்னையில் செல்லமகளுக்கு
சாமர்த்தியம் கற்றுத்தந்தீர்கள்!
ஊதியத்தில் வாங்கிக்கொடுத்த பரிசுகளை
உற்சாகமாய் உலகுக்கு காட்டினீர்கள்!
பார்ப்பதற்கு மட்டுமல்ல
பண்பிலும் உயர்ந்தவரை எனதாக்கினீர்கள்!
அயல்நாட்டு பிரவேசம்
கண்டு ஆர்ப்பரித்தீர்கள்!
துபாயில் துள்ளிக்குதித்தீர்கள்!
என் மகளின் கனவுகளையும் நிறைவேற்ற
என்னுடன் எப்பொழுதும் வேண்டும் அப்பா!
No comments:
Post a Comment