Tuesday, November 22, 2016

ஹைக்கூ வகைமைகள் - சென்றியு


கேலி கிண்டல் நையாண்டி நடை 

அரசியல் சமூக நடப்புகளை வைத்து எழுதுக 3 வரிகள் அசை கணக்கில்லை
2ஆம் அடி மட்டும் நீளும்

எடுத்துக்காட்டு 1: 
 

ஊரெங்கும் வெள்ளம் புரள்கின்றது
உள்நாக்கில் படவே இல்லை சொட்டு நீர்
சென்னை வெள்ளம்



எடுத்துக்காட்டு 2: 
 

பூச்சிமருந்துகுடிக்க
விதவிதமாய் விளம்பர தூதர்கள்
அயல்நாட்டு குளிர்பானம்!
 
எடுத்துக்காட்டு 3: 
 
கந்தையானாலும் கசக்கிக்கட்டியவர்கள்
கிழிந்ததையும் களிப்புடன்கட்டிக்கொண்டனர்
அயல்நாட்டு அலங்கோலம்!
 
எடுத்துக்காட்டு 4: 
 
மக்கும் மஞ்சப்பைக்கோ மதிப்பில்லை
மக்கா பாலிதீன்பைக்கோ பகுமானம்! 

ஹைக்கூ வகைமைகள் - பழமொன்றியு



ஒரு பழமொழி முதலில் சொல்லி அடுத்த வரிகளில் அதனை எதிர் மறையாக நையாண்டி செய்வது

பழமொழி+சென்றியு=பழமொன்றியு
 
எடுத்துக்காட்டு 1: 
  
சிறுதுளி பெருவெள்ளம்
பெருவெள்ளத்தில் சிறுதுளியானோம்

எடுத்துக்காட்டு 2: 
  
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
நன்றாகவே நடிக்கின்றோம்!


எடுத்துக்காட்டு 3: 
  
ஆயிரம்முறைபோய் ஒரு கல்யாணத்தை பண்ணனும்
துப்பறியும் நிறுவனத்தின் துணையுடன்!
 
எடுத்துக்காட்டு 4: 

ஆனைக்கும் அடிசருக்கும்
கோபுரமும் காலடியில் நிழலாய்!