Sunday, December 10, 2017

ஈழம் 87 - வெட்ட வெட்டத் துளிர்க்கிறது மறம் - புகழேந்தி தங்கராஜ்

அறியப்படாத புதைக்கப்பட்ட வரலாற்றையும்,  மறைக்கப்பட்ட உண்மையையும் நம்  நாளையத்தலைமுறைக்கு  சொல்லவில்லை என்றால் நிச்சயம்  நாமும் குற்றவாளிதான். 


தமிழில் முதன் முதலாய் வரலாற்று ஓவியப் பதிவு, எழுத்துக்களுடன் வெளியிடப்பட்டுள்ள புத்தகம்  1987 களில் நடந்த தமிழினத்தின் மீதான வஞ்சத்தையும் துரோகத்தையும் விவரிக்கிறது. சிங்களர்களின் சூழ்ச்சியாலும், இந்தியாவின் அறியாமையாலும் இந்திய இராணுவமும் விடுதலைப் புலிகள் அமைப்பும் எப்படி பிரிக்கப்பட்டு வேட்டையாடப்பட்டது என்பதை உணர்ச்சிகளோடு உணர்த்துகிறது புகழேந்தி தங்கராஜின் புத்தகம்.

வன்னிக்கலைஞனின் ஓவியங்களை வெறும் வரைபடமாகக் கடந்து செல்ல இயலவில்லை.எழுத்துக்களால் நம் மனதிலே ஏற்படும் தாக்கங்களை விட ஓவியங்கள் அதிவிரைவாக வலியையும் எழுச்சியையும் கடத்துகின்றது.மருத்துவமாணவரான திலீபன் படித்த யாழ்ப் பல்கலைக்கழகக் கல்லூரியிலேயே அவர் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காகக் கிடத்தப்பட்டிருந்ததை படிக்கும் பொழுது , அவரின் உடலைப் பார்த்து கலங்கிய அந்த கல்லூரி மாணவர்களின் துயரத்தை நம்மாலும் உணரமுடிகிறது.


சிறு வயதிலேயே தன் மக்களுக்காகவும்  லட்சியத்திற்காகவும் திலீபன் கொண்டிருந்த துணிச்சல், நம் தலைமுறையினர் அவரிடம் இருந்து கற்க வேண்டிய பாடம். 17 புலிகளைக் கைது செய்து விளம்பரம் தேடிக் கொள்ள நினைத்தவர்களை பழிவாங்குவதற்கு புலேந்திரன், குமரப்பா போன்று 12 வீரர்கள் சயனைடு குப்பிகளின் உதவியை நாடியதே இனவிடுதலையின் எழுச்சிப் போராட்டத்துக்கு வித்தாய் அமைந்ததை தெரிந்து கொண்ட பொழுது இதயம் இரணமானது. 

இந்திய அமைதிப்படை அவர்களைக் கொழும்பிற்கு அழைத்துச் செல்லவிடாமல் உதவி செய்ய முயற்சி செய்த போதிலும் இலங்கைக்கான இந்தியத்தூதுவர் ஜே.என்.தீட்சித் போன்று, இரட்டை வேடம் போடும் அதிகாரிகள், பிரதமர் இராஜீவ் காந்தி போன்ற மனிதர்களின் அலட்சியம் ஒரு இனத்தை அழிப்பதற்குக் காரணமாய் அமைந்தது அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மையான தலைவனுக்குத் தேவையான பண்பை தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கற்கலாம்.தலைசிறந்த அதிகாரியாய் விளங்குவதற்கான நல்ல எண்ணங்களை இந்திய அமைதிகாப்புப் படை அதிகாரி ஹர்கிரட் சிங்கிடம் தெரிந்து கொள்ளலாம்.


 1200 வீரர்களைப் பறிகொடுக்க வைத்த பின் 1990 ஆம் ஆண்டு  
பாரம்பரியமிக்க இந்திய இராணுவத்தை அவமானத்துடனும் தோல்வியுடனும் இலங்கையைவிட்டு வெளியேறச் செய்த இலங்கை அதிபர் ஜயவர்தனாவின் சூழ்ச்சியை இந்தியா அறிந்து கொள்ளாவிட்டாலும் நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. "ஈழம் 87 - வெட்ட வெட்டத் துளிர்கிறது மறம் புத்தகம் குறித்து விரிவான நூல்மதிப்பீட்டை வழங்கிய அபிநய ஸ்ரீகாந்த் அவர்களுக்கு நன்றி.....

    எனக்கு பல ஆயிரம் நண்பர்கள் இருக்கிறார்கள், ஆனால் கொடுத்த வாக்கை கற்பை போல் எண்ணி செயல்படும் ஒரு சில நண்பர்களில் அருள் வளன் அரசு ஆவார் நன்றி தோழர்...

    ம.லோகேஷ், பதிப்பாளர், தாய்ப்பனை.

    ReplyDelete
    Replies
    1. We should thank you for the wonderful work sir....Hats off

      Delete