Tuesday, April 25, 2017

கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அம்மாவைப் போன்று மனைவி
அமைய வேண்டுமென
ஆண் மட்டும்தான் கேட்பானா?
நானும் தான் கேட்டேன்
அப்பாவைப் போன்று
பண்பான கணவன்
வேண்டுமென்று!

புகைப்பழக்கம் 
உண்டோ என்றேன்
மாசுப்புகைக்கே
மயங்கி விடுவேன் என்றாய்!

மதுப்பழக்கம் 
உண்டோ என்றேன்
முகர்ந்து பார்த்தாலே
மூர்ச்சை ஆகிவிடுவேன் என்றாய்!

முன்னால் காதலி
யாரேனும் சிந்தையில்
உண்டோ என்றேன்
பெண்களைத் தவறான
கண்ணோட்டத்தில்
கண்டதே இல்லை என்றாய்!

வாழ்கைத்துணையின்
கனவுகளுக்கு 
வண்ணந்தீட்டுபவன்
இம்மண்ணில்
உண்டோ என்றேன்
வளர்ச்சிப்பாதையில்
தடைக்கல்லாய் இல்லை
படிக்கல்லாய் இருப்பேன் என்றாய்!

காதலின் வலியைப் 
உணர்ந்திருக்கிறாயா என்றேன்
உன்னைப் பிரிந்து
ஊடல் கொண்ட நேரத்தில்
உயிர்பிரியும் வேதனையை 
உணர்ந்திருக்கின்றேன் என்றாய்!

இப்படியும் ஓர் ஆண்
இவ்வுலகத்தில் உண்டோ என்றேன்
ஆம் உனக்காகவே
உலகத்தில் அவதரித்தேன் என்றாய்!

14 comments:

  1. விரும்பிய கணவன்
    விரும்பிடும் படியே
    இருந்திடும் போதில்
    இன்பமே மிஞ்சும்
    இனிய வாழ்த்துகள் அயிநயா

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்

      Delete
  2. ஆம்..அபினயா...அருமையான வரிகள்...வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சார்ந்த நன்றிகள்

      Delete
  3. மதுவும் மாதுவுமில்லா
    புகையும் பகையுமில்லா
    காதலும் ஆனால் காதலியில்லா
    கணவன் கண்அவன்
    கண்விழாமல் கணவனும் கண்அவளும்
    வாழ வாழ்த்துகிறேன்

    -நெல்லை ஆடலரசன்@Natarajan

    ReplyDelete
    Replies
    1. அருமை...மிக்க நன்றி

      Delete
  4. பெருத்தமான வரிகள் அண்ணி.. நன்றி

    ReplyDelete
  5. வரிகளின், அழகு... அபாரம்...!! கண் (அவர்) கணவருக்காக கவிதை படைத்தது.., அற்புதம்... அபி...,,

    ReplyDelete
  6. இருவர் உள்ளம்
    ஒன்றாய்க் கலந்த பின்
    உண்டான நம்பிக்கை வழிகாட்ட
    நெடுநாள் நீடூழி வாழ
    வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நெஞ்சார்ந்த நன்றிகள்

      Delete
  7. அருமை .. அழகான வரிகள்.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மனமார்ந்த நன்றிகள்

      Delete