Thursday, December 1, 2016

குழந்தைகளை குதூகலப்படுத்தும் பாடல் - குளிக்கலாம்!


குளிக்கலாம்! குளிக்கலாம்!
குதூகலமா குளிக்கலாம்!
தேச்சு தேச்சுக் குளிச்சு
அழுக்குத் தேச்சுக் குளிக்கலாம்!

சவர்க்காரம் தேச்சு

சந்தோஷமாய் குளிக்கலாம் !



முகத்திலையும் தேய்க்கலாம்!

கையிலையும் தேய்க்கலாம்!

வயிற்றிலையும் தேய்க்கலாம்!       

கால்லையும் தேய்க்கலாம்!

தேச்சு தேச்சு  குளித்து

சுத்தமாய் இருக்கலாம்!

சுத்தமாய் இருக்கலாம்!

ஐக்கிய அமீரக தேசிய தினம்



அசத்தல் அருங்காட்சியங்களை அகத்தேகொண்ட அஜ்மான்!
தீபகற்பத்தின் தீபமாய் ஷார்ஜாவின் ஒளித்திருநாள்!
பறப்பதற்கும் பிரார்த்தனைக்கும் பாலமிடும் அபுதாபி!
தரணியையேத் தன்னகத்தே ஈர்க்கும் துபாய்!
பாரம்பர்யத்தைப் பரைசாற்ற புஜைராவின் எருதுச்சண்டை!
நட்சத்திர விடுதிகளுடன் மின்னும் ராசல்கைமா!
கோட்டையினுள் கேடையங்களுடன்  காட்சிதரும் உம்அல்குவைன்!

ஈருடல் ஓருயிரல்ல ஏழுடல் ஓருயிரன்றே!
சுற்றுலாவையும் சொர்க்கமாய் சொக்கவைக்கும் சொர்க்கபுரியே!
கண்கவர்கடலிடம் இச்சையுற்று மயங்கிய பேரிச்சைமரங்களே!
திறமைசாலிகளின் திறமைகளைத் திராம்களாய்தரும் திருநாடே!
வண்ணவண்ண வானவேடிக்கைகளும் வாய்பிளந்து வியக்கவைக்கிறதே!
சுத்தமும் சுகாதாரமும் தரமாய் சுகம்தருகிறதே!
பாதசாரிகளுக்குப் பாதைதந்துப் பார்த்தசாரதிகள் பொறுக்கின்றனரே!
போக்குவரத்தும் பயணக்களைப்பைப் போக்கும் வரமானதே!
அயல்நாட்டினரையும் அன்பாய் அரவணைக்கும் அமீரகமே!

உதவி



சுட்டெரிக்கும் சூழலில் அயலார் உழன்றிடினும்
பாறைப்பனி மனமுருகி உதவிஊற்றாய் தாகம்தனிக்குமே!
பகலவனாய் பலனேதும் பாராமல் பாசக்கதிரை
பாரில் பரவச்செய்ய உலகமே உயிர்பெற்றிடுமே!
ஆதவன் ஆதாயாமின்றி ஆற்றலை அள்ளித்தர
வழங்கப்பெற்றவர் வரியவருக்கு வாரிக் கொடுத்திடுவரே!

பூமித்தாய் பூதவுடல் போதுமென போதிக்க
மாற்றுத் திறனாளிக்கும் மாற்றம் மலர்ந்திடுமே!
காய்ச்சமரமாய் கல்லடிபடினும் கனியை  கள்வருக்கும்
வழங்குகையில் வானும் நெகிழ்ந்து பன்னீர்தெளித்திடுமே!
பணம் பெற்றவரும் குணம் பெறுகையிலே
செய்திடுவார் உதவி பெற்றிடுவார் பதவி!

அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரமோ
கொடுக்க கொடுக்க குறையாது நிறைகுடமோ
ஆச்சர்யம் அள்ளித்தந்திடுமே அறிவுப் பகிர்வு!
சீற்றந்தரும் இயற்கையும் ஏற்றந்தரும் உதவிகள்கண்டு
ஏமாற்றம் கொண்டு விட்டுவிலகி ஓடிடுமே!
விதைத்தவன் மறந்தாலும் விருட்சமாய் வளர்ந்து
காயும்கனியாய் வளர்த்தவன் வசம் சேர்ந்திடுமே!

Tuesday, November 22, 2016

குழந்தைகளை குதூகலப்படுத்தும் உணவுப்பாடல் - சப்பாத்தி

சப்பாத்தி !சப்பாத்தி !
சப்பாத்தி !சப்பாத்தி!
கோதுமைமாவும் தண்ணீருப்பும்
சேந்து பிசைந்த சப்பாத்தி!

பிசைந்து பிசைந்து பிசைந்து
பிய்த்து பிய்த்து பிய்த்து -
உருட்டி உருட்டி உருட்டி
தேய்து தேய்து தேய்து
அழுத்தி அழுத்தி தேய்து
கல்லுல போட்டு திருப்பலாம்!

வெண்ணையையும் தடவலாம்!
நெய்யையும் தடவலாம்!
எண்ணையையும் தடவலாம்!
பிட்டு பிட்டு பிட்டு
சந்தோஷமாய் சாப்பிடலாம்!
சந்தோஷமாய் சாப்பிடலாம்!