வெள்ளைப்புரட்சியென
வெளிவேச அக்கறையா
கலப்பினமாட்டைக் களமிறக்கி
நீரழிவு மருந்தினை விற்கிறியா?
புலிப்பால் குடித்த
தமிழர்கள் நாங்களடா
புலிக்குளமாட்டுப் பாலின் பெருமை
பாரறிந்த உண்மையடா
சாதிசமயம் பார்க்காத சமத்துவமடா
பல்லாயிரவருட பாரம்பரியமடா
பெறாத பிள்ளைகளடா
பாசம்கொண்டோம் காளைகளிடமடா
என்காளைமட்டும்
திமில் கொண்டதல்லடா
எங்கள் காளையரும்
தமிழின திமிர் கொண்டவர்களடா
பன்னாட்டு வணிகஅரசியலுக்கு
வளைந்து பணியமாட்டோமடா
விந்தூசி விற்பனைக்கோ
பாலினத் தீர்மானத்திற்கோ
பரம்பரையைப் படுகுழியில்
தள்ளமாட்டோமடா
காளைகளுக்குக் கணினிக்குள் காவலா
வாடிவாசல் திறந்து
விளையாடிடுவோம் சல்லிக்கட்டு
போராடிடுவோம் மல்லுக்கட்டு
கொம்பைப்பிடித்து விளையாடக் கெடுபடியா
காம்பைப்பிடித்து இரத்தத்தைஉரிய அனுமதியா
கலாச்சாரத்தைக் கலைக்கவந்தப் பீட்டா
உன் முகத்திரையை கிழிப்போம் போடா
அருமை யான பதிவு. கன்னிக்கோவில் இராஜா
ReplyDeleteமனமார்ந்த நன்றிகள்
Delete