Wednesday, January 4, 2017

தை

ஈரைந்து மாதத்தை
தமிழத்தாய்ப் பெற்றதை
மகளாய் வந்ததை
தனமள்ளித் தந்ததை

தைதையென 
துள்ளித்துள்ளி வந்ததை
மஞ்சள்நூலை பூலாவேம்பூவை
மாவிலைத் தோரணத்தை

வீடுவெள்ளை அடித்ததை
வரவேற்கும் காரணத்தை
அகக்குப்பைப் போக்கி
அகமகிழ வைத்ததை!
வாசலில் வண்ணவண்ண
வடிவில் கோலத்தை!

உழவன் உணவளிக்கும்
உலகத்தை
உழவனுக்கு ஊட்டமளிக்க
வந்ததை
பரிதிக்குப் பணிந்ததை
பொங்கலும் கரும்பும்
விரும்பிப் படைத்ததை
உறவுகளைக் காணவிரும்பும்
பண்டங்களதைத் திண்ணத்திண்ண
தித்திப்பை வழங்குதை

காளையைக் காளையரடக்குவதைக்
கன்னியரும் கடைக்கண்ணால் 
கண்டுரசித்ததை!
தமிழ்ப்பண்பாட்டுடன் ஆடல்பாடலென
அதிரவைக்கும் தித்தித்தை!

No comments:

Post a Comment