செல்வச்செழிப்பு சூழ்ந்தாலும் பாதுகாப்பற்றத்தனிமை
பின்தொடர்ந்தாலும்
புத்தகத்துடன் சோதனைகளை
சாதனைகளாக்கிய சரித்திரநாயகியே!
இளமைகால விளையாட்டாய் வானரசேனை பாலசர்க்கார சங்கம்
சுதந்திரவேட்கையுடன்
தந்தையிடம்கற்ற இராஜதந்திரமும் சங்கமம்
அண்டைநாடாயினும் தம்மக்களாய்துயர் துடைக்க
புதுதேசம் பெற்றெடுத்த அன்னையே!
வங்கதேச உருவாக்கம் வங்கிகளும் தேசியமயமாக்கம்
வேளாண்திட்டங்களுடன் உணவளிக்க
பசுமைப்புரட்சி
சிரிக்கும் புத்தராய்
பொக்ரானில் அணுஉலகில்புரட்சி
கெட்டசெய்தி கொண்டுவருமா
வால்நட்சத்திரம்
பயங்கரவாதத்திற்கு
பரிசாயின்னுயிர் பறித்ததே நீலநட்சத்திரம்
ஊமைபொம்மை என்றோரை
அவசரநிலைகொண்டு
வாயடைக்கச் செய்த வனிதையே!
இருபதாம் நூற்றாண்டில்
இருபதுஅம்சதிட்டத்தால்
இதயங்களில் இடம்பிடித்து இந்தியாவை
இமயம்தொடச்செய்த இந்திரா(ணி)நீ!!!
No comments:
Post a Comment