Wednesday, January 4, 2017

பூத்திருக்கும் புத்தாண்டு



இன்றியமையா இயற்கையோடு
இச்சைக்கொண்டு 
பூங்கொத்துக் கொடுத்துக்
காதல் கூறி இணைந்திடுவாயா
நறுமலர் பூச்செண்டே
புதிதாய்ப் பூத்திருக்கும் புத்தாண்டே!

செயற்கையாய்ச் சூழ்ச்சி
செய்து சீரழிக்க
எவரேனும் வந்தால்
உன் முட்களால் குத்திவிடுவாயா
புதிதாய்ப் பூத்திருக்கும் புத்தாண்டே!

போர் நடக்கும் பாரினிலே
சகோதரத்துவத்துடன்
சமாதானம் செய்து
ஆயுதம் விடுத்து
அன்புக்கிளைகளை நீட்டிடுவாயா
புதிதாய்ப் பூத்திருக்கும் புத்தாண்டே!

பெருநிறுவன 
முதலைக்கண்ணீரை விடுத்து
சிறுகுறுவணிகர்களின்
துன்பத்துயரை உன் 
மென்னிதழால் 
துடைத்திடுவாயா 
புதிதாய்ப் பூத்திருக்கும் புத்தாண்டே!

கெடுதல்விளை போதையிடம்
காப்பாற்றி உன் நறுமணத்தில்
மயக்கிடுவாயா
நறுமலர் பூச்செண்டே
புதிதாய்ப் பூத்திருக்கும் புத்தாண்டே!

இரசாயான உணவிடமிருந்து
இரட்சித்து நோய்களுக்கு மருந்தாய்
உன்தேன் துளித்தருவாயா
நறுமலர் பூச்செண்டே
புதிதாய்ப் பூத்திருக்கும் புத்தாண்டே!

No comments:

Post a Comment