நண்பர் நட்புடன்
தன் குடும்பத்தைச்
செய்துவைத்தார் அறிமுகம்
வணக்கம் கூறிய
என் மகளைக் கண்டு
நண்பர்மகள்
கொண்டாள் சிறுமுகம்
வணக்கம் என்ற வார்த்தை
வழக்கத்தை விட
ஹாய் என்ற
சொல்லுக்குத்தான்
மவுசும் மரியாதையோ?
வாய்நிறைய வாஞ்சையுடன்
இருகைகள் கூப்பி
இதயம்கனிந்து
அனஹத சக்கிரத்தை
அன்பால் சுழலவிட்டு
பத்து விரல்களும் பக்கம் வந்து
ஒன்றொடொன்று
விரல்பதித்து
ஞாபக சுரப்பிகளை
சுறுசுறுப்பாக்கி
பார்க்கும் மனிதரை
படம்பிடித்துக் கொண்டு
சொல்லப்படும் வணக்கம்
மனிதர்கள் மத்தியில்
இணைபிரியாது இருக்க
எந்நாளும்
ஏற்படுத்திவிடும்
இணக்கம்!!!
வணக்கம் சொல்லி
ReplyDeleteவரவேற்பது போல
வணக்கம் சொல்லி
அறிமுகமாவதும் இருக்கே!
ஆமாம் ஐயா
Deletehttps://plus.google.com/u/0/communities/110989462720435185590
ReplyDelete