என்னை ஈர்த்தவனே,
முகப்புத்தகத்திலும் முதல்சந்திப்பிலும் முழுவதுமாய்
உன்னிடம் என்னை மொத்தமாக ஈர்த்தது.
பின்புதான் தெரிந்துகொண்டேன் –
உன் பெயரிலேயே காந்தத்தை வைத்திருக்கின்றாயே!
நீ எதிர்பார்த்ததற்கு எதிர்ப்பதமாய்
இருந்த போதிலும்
இதயத்தில் மின்னல் வெட்டியது என்றாயே!
ஆறடி ஆண்மகன்தான்
அழகனென்று எண்ணினேன்
அன்பால் அணைத்து உள்ளத்தில்
ஆழமாய் நின்றாயே!
காதலில் கசிந்துருகி
உனக்காக பலமாதங்கள்
காத்திருப்பதையும் காதலிக்க வைத்தாயே!
சமையலறையில் உன் பாராட்டு்களால் மனம்
சிறகடித்து பறக்கச்செய்தாயே!
என் கனவுகளை கனவாக்கிவிடாமல்
கணவனாய் காதல் செய்யும் கள்வனே!
No comments:
Post a Comment