உங்கள் காதலால் உலகுக்குவந்த நான்
உலகில் கண்டமுதல் காதலர்கள் நீங்கள்!
என்றும் காதலர்களாக கரம்பிடிக்கையில்
இன்றும் கண்ணில்கர்வம் கொப்பளிக்கும்!
தேவதையின் தீண்டல்இல்லையெனில்
பித்தனென்று பிதற்றினார் அப்பா!
தீயபழக்கங்கள் தீண்டாத
திறமைசாலியென திமிர்கொண்டாள் அம்மா!
பெரியோரின் பெருமைகளை
போட்டிபோட்டு போதிப்பு!
நான் தோழர்களின் தோழமைவிவரிக்கையில்
இத்தோழர்களுக்கும் பொறாமை பொறுமியது!
கவிதை விதைக்கு வித்திட்டு
கதைகள் கூறிவளர்த்திட்டு
கவியாய் வளர வாழ்த்து!
கனவுஇல்லத்தைகட்டி, எனக்கு
நற்கணவனைஇல்லறத்தில்காட்டி
கனவுகள் நினைவுகளான களிப்பு!
ஊடல்ஊடுருவுவதற்கும்,
கூடல்கொஞ்சுவதற்குமென
தாம்பத்யத்தின் தத்துவங்கள்
இல்லறத்தின் நல்லறம்!
எங்கள் காதல் கரைபுரண்டோட
உங்கள் காதல்வெள்ளம்தான் காரணமோ!
பெற்றமகளைவிட மகள்பெற்றவளிடம்
பாரபட்சத்துடன் பாசம்!
பிள்ளை மட்டுமல்ல,பெற்றோர் பெறவும்
பெருந்தவம் புரிந்தேனோ!
No comments:
Post a Comment