கோமலவள்ளியே கோமகள் ஆனாய்
காண்பவர் கவரும் பேரழகியானாய்
கலைகளிலும் சகலகலா வல்லியானாய்
வில்லாதி வில்லருக்கும் வில்லியானாய்
ஜெயலலிதாவாய் ஜெயம் கண்டாய்
செயல்அளித்துச் செழுமை சேர்த்தாய்
இசைக் கருவிகளையும் மீட்டினாய்
தேனிசைக் குரலிலும் பாடினாய்
மொழிகளிலோ பெரும் புலமை
ஆடற்கலையிலோ சொக்கும் திறமை
பெண்ணினத்துக்கு முன்மாதிரியாய் பெருமை
திட்டங்களும் வளர்ச்சியுமோ அருமை
தனிமை துயர்துடைக்கும் கரங்கள்
அறிவாற்றல் பெருக்கும் நூல்கள்
அகங்காரமும் ஆணவமும் அரண்கள்
அழகுத்திறமையை அதிசயக்கும் கண்கள்
கூடாநட்பு கேடாய் துரோகம்
இளவயதிலும் இறுதியிலும் சோகம்
அரசியலில் குருவாய் எம்.ஜி.ஆர்
அன்பிலே இவரைமிஞ்ச வேருயார்
வழக்குகளால் நிரம்பிய வாழ்க்கை
வீழ்வதும் எழுவதுந்தரும் நம்பிக்கை
அம்மாவின் அரவணைப்புக்கு ஏங்கி
அம்மாவாய் மக்களுக்கு மனமிறங்கி
தங்கமங்கையாய் நிறைந்தாய் நெஞ்சில்
மக்களுக்காகவே நானென்ற சொல்லில்!
No comments:
Post a Comment