Sunday, July 9, 2017

அர்ச்சனா அக்காவிற்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஜெகத(ஈசனக்கும்)
ராஜ ராஜ (ஈஸ்வரிக்கும்)
வாழ்வெல்லாம் வசந்தம் வீசி
இனிக்கும் இல்லறத்தின்
இனிய பயனாய்
இனிப்பகத்தின் பெயரை
இனிதாய்ச் சூடிக்கொண்டவளே!

புத்தகப் பிரியையாய்
பவனிவந்து
மென்மையும்
மேன்மையும்
பொருந்தியவளென்பதால்
தலைசிறந்த
மென்பொருள் நிறுவனத்தின்
தாரகையானாய்
தனலட்சுமியுமானாய்!

ராமன் பெயரைக்கொண்ட
குறும்புக் கிருஷ்ணனைக்
காதல் கணவனாய்க்
கொண்டவளே...
இலட்சியங்கள் பலகொண்டு
இலக்குகள் இலகுவாகவே
வாழ்க்கை இரட்சிக்கப்
பெறவே இரக்ஷனாவாய்ப்
பெற்றவளே!

இயற்கையின் மேல்காதல்
இயற்கையாகவே தோன்றினாலும்
இதயக்கூட்டில் வாழ்பவனுக்குத்
தேனாய்த் தித்திப்பவளே
குண்டுக் கண்கள் உருட்டி
கோபப் பார்வை பார்த்தாலும்
கொஞ்சவே தோன்றும்
சுடிதார் அணிந்த சொர்க்கமாய்
மாமன் மனதும் களவாடப்படும்

எடுத்துக்காட்டாய்
எட்டுத்திக்கும்
புகழ் பெற்று
பெரியோர்களின்
பேரன்புக்குப் பாத்திரமானவளே
நிறைகுடமாய் நிறைவான
வாழ்வு பெற்று
நீடுழி வாழ்ந்திடப்
பிறந்தநாள் வாழ்த்துப்பாக்கள்!

3 comments:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    ReplyDelete