SERB - AV Accelerate Vigyan
ஆய்வு மாணவர்களுக்கான திட்டம்❤️
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான Science and Engineering Research Board (SERB) Accelerate Vigyan திட்டத்தை 2020 ஆண்டு ஜூலை 2 தேதி தொடங்கியது . நாட்டின் ஆராய்ச்சித் தளங்களை விரிவுபடுத்தி, உயர்தர அறிவியல் ஆராய்ச்சிக்கு வழிவகிக்கும் விதமாக அறிவியலில் மேம்பட்ட மனிதவளத்தை உருவாக்குவதே இதன் குறிக்கோளாகும். அனைத்து அறிவியல் பயிற்சித் திட்டங்களையும் ஒருங்கிணைத்தல், உயர்நோக்குநிலை கொண்ட பயிற்சிப் பட்டறைகளைத் தொடங்குதல் மற்றும் வேலைவாய்ப்புடனான ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குதலே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நாட்டின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்டத் துறைகளில் முனைவர் பட்டம் பெறத் தகுதியுள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்பதே ‘மிஷன் அபயாஸ்’( Mission Abhyaas)
திட்டமாகும். Karyashala கார்யசாலா என்ற உயர்நிலைப் பட்டறைகள் மற்றும் Vritika விருத்திகா என்ற ஆராய்ச்சிக்கான பயிற்சி வகுப்புகள் வழியாகவும் இப்பணி நிறைவேற்றப்பட உள்ளது. Indian Institutes of Technology, Indian Institute of Science, Indian Institutes of Science Education and Research, National Institutes of Technology, Council of Scientific & Industrial Research, Indian Council of Agricultural Research, Indian Council of Medical Research போன்ற இந்திய அளவிலான முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் இப்பயிற்சிகளை வழங்குகின்றார்கள்.
அதிநவீன ஆராய்ச்சிப் பணிகளுக்குத் தேவையான கருவிகள் குறித்த புரிதல் மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அனுபவத்தை வழங்குவதே Karyashala வின் நோக்கமாகும். தங்களது நிறுவனத்தில் உயர்நிலை வசதிகள் கிடைக்காமல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சித் துறையில் சிறந்து விளங்குவதற்கான வேட்கையுடன் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்று முதல் ரெண்டு வாரங்கள் வரை நடைபெறும் உயர்நோக்குநிலை கொண்ட பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்கும் மாணவர்களது தங்குமிடம், உணவு, பயணச்செலவு போன்றவற்றை அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான SERB நிதி உதவி அமைப்பு ஏற்றுக்கொள்கிறது.
தேவையான உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவம் பெறாத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியார் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த திறமையான ஆய்வு மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடனான ஆராய்ச்சி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தருவதே 'விருத்திகா' வின் நோக்கமாகும். தங்குமிடம், உணவு, பயணச்செலவு போன்றவை மட்டுமே ஏற்கப்பட்டு வேறு எந்த உதவித்தொகையும் தரப்பட மாட்டாது.
நாட்டின் அனைத்து அறிவியல் தொடர்புகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே Samoohan என்ற அமைப்பு. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், பங்குதாரர்கள், வழிகாட்டிகள், ஒருங்கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைப்பதே இந்த அமைப்பின் குறிக்கோளாகும். இவை Sayonjika மற்றும் Sangoshthi திட்டங்களின் வழி அடையப்படுகின்றது. தேசிய நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் நிகழ்வுகள் சயோஞ்சிகா திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். "அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்" மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தொடர்பான நிகழ்வுகள் நிதியுதவிக்கு மட்டுமே தகுதியானவையாகின்றன.
நாட்டின் அனைத்து அறிவியல் துறைகள் மற்றும் அமைச்சகங்களின் முக்கிய திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பே Sayonjika திட்டமாகும். SERB இன் தற்போதைய குறித்தான கருத்தரங்குத் திட்டங்களே Sangoshthi என்றழைக்கப்படுகிறது. அறிவியல் நிகழ்வுகளை நடத்துவதற்காக கருத்தரங்கு திட்டத்தின் வழி ஐந்து லட்ச ரூபாய் வரை வழங்கிய அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான Science and Engineering Research Board (SERB) Sangoshthi திட்டத்தால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
https://acceleratevigyan.gov.in/
No comments:
Post a Comment