SERB - POWER ஆராய்ச்சிகளில் ஈடுபடும் பெண் விஞ்ஞானிகளுக்கான வாய்ப்புகள்❤️
அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் 2008ம் வருடம் தொடங்கப்பட்டது. SERB என்றழைக்கப்படும் இவ்வாரியம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்குகின்றது. அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியமான Science and Engineering Research Board (SERB)
அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சியில் பாலின வேறுபாடுகளைக் குறைக்கும் வகையில் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக SERB – POWER (Promoting Opportunities for Women in Exploratory Research) என்ற மேம்பாட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகங்கள், அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிக்கூடங்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய கல்வி மையங்களில் அங்கீகாரம் பெற்றுள்ள 40 வயதிற்குட்பட்ட பெண் விஞ்ஞானிகளுக்கு விருதுகளும் அளிக்கப்படுகின்றது.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறையில் பெண்களை மேம்படுத்தும் இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன. அறிவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான உதவியை இத்திட்டம் வழங்குகின்றது. ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான இணக்கமான சூழலை இத்திட்டம் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உயர்மட்டக் குழுக்களில் பெண்களை நியமித்து அவர்களது தலைமைப் பண்பை வளர்க்கும்விதமாக செயல்படுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக ஒரு நிதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. SERB – POWER Fellowship , SERB – POWER Research Grants என்ற இரு பிரிவுகளின் கீழ் இத்திட்டத்தின் வழி மாணியங்கள் வழங்கப்படுகின்றன. ஆய்வாளர்கள் ஒரே காலக்கட்டத்தில் இவ்விருதிட்டங்களில் இணைந்து பயன்பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
SERB – POWER Fellowship
இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகங்களில் சிறந்து விளங்கும் பெண் ஆராய்ச்சியாளர்களை அடையாளம் கண்டு வெகுமதி அளிக்கவே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் பொறியியல் துறையில்
முனைவர் பட்டம் பெற்று தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுவரும் 35-55 வயதுக்குட்பட்ட பெண் ஆராய்ச்சியாளர்கள் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். சம்பளத்துடனான கூடுதல் ஊதியமாக மாதம் 15,000 ரூபாய் வழங்கப்படுகின்றது. ஆராய்ச்சிக்கான மானியமாக வழங்கப்படும் பத்து லட்சம் ரூபாயை ஆராய்ச்சி உபகரணங்கள், உணவு, உதவியாளர்களுக்கான ஊதியம், உள்நாட்டுப் பயணங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆராய்ச்சியாளர்கள் நிறுவனத்தின் மேல்நிலைப் பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள். மூன்று வருடங்களுக்கு உறுதிப்படுத்தப்படும்
இத்திட்டத்தின் காலத்தை நீட்டிக்க முடியாது.
வெற்றிகரமாக செயல்பட்ட ஆராய்ச்சியாளர்களால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஆய்வாளர்கள் வேறு எந்த அரசுமானியங்களையும் அக்காலகட்டத்தில் பெறமுடியாது. www.serbonline.in என்ற இணையதளத்தின் வழி வருடந்தோறும் விண்ணப்பிக்கலாம்.
SERB – POWER Research Grants
இத்திட்டம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு
மூன்று வருடங்களுக்கு முப்பது லட்சம் முதல் அறுபது லட்சம் வரை மாணியமாக வழங்கப்படுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், தேசிய ஆய்வகங்கள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பதவி வகிக்கும் ஆய்வாளர்கள் இந்தியக்குடிமனாக இருக்கும்பட்சத்தில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகைய திட்டங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை நிச்சயமாக உண்டாக்கித்தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
http://serb.gov.in/home.php
No comments:
Post a Comment