திருக்குறளுக்கு கலைஞர் கருணாநிதி, பரிமேலழகர், மு.வரதராசனார், தேவநேயப்பாவணர்னு பல பேர் பல தெளிவுரைகள் எழுதியிருக்கும் போது , இந்தத் தெளிவுரை எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததுன்னு நீங்க நினைக்கிறதயேத்தான் நானும் யோசிச்சேன்.
'இன்னை'க்குங்கிற சொல் மருவி 'இம்மை'க்குன்னு சொல்லா ஆனது.
ஆகமம் என்பது பாவ புண்ணியங்களைக் கூறும் ஆரியவேத மரபு நூல். அதற்கு உட்பட்டு பரிமேலழகர் இம்மை என்ற சொல்லுக்கு இப்பிறவி என்று பொருள் தருவது, திணிக்கப்பட்ட பொருளாத்தான் தோன்றுகிறது. இப்படிப்பல அறிஞர்கள் பல வகையான அர்த்தங்களை வலிந்து புகுத்துகின்றமாதிரியே திருக்குறளோட பல உரைகள் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த உரை தமிழ்பண்பு மாறாமல் மதச்சார்பில்லாமல் இயற்றப்பட்டிருக்கிறது.
அதிகாரம் (1-4) அடிப்படைக் கல்வி,அதைக் கற்றுத் தரும் ஆசிரியர்,
அதிகாரம்(5-7) இல்லறம், குடும்பம் ,
அதிகாரம்( 8-21)அன்புடையார் ,
அதிகாரம்(22-33) அருளாளர்,இப்படி மனிதவாழ்வினைப்பிரித்து வாழ்க்கையிள் விளக்கம் கூறுவது திருக்குறள்.
அதிகாரம் (34-38) உபநிடத, கீதையின் கருத்துகளை மறுக்கின்ற பகுதி.
பிரம்ச்சரியம், கிரஹஸ்தம், வனப்ரஸ்தம், சந்யாசம்ங்கிற நான்கு ஆசிரமங்களைக் கொண்ட நூல் மநுதர்மம். இந்நூல் திருக்குறளின் மேற்கூறிய பிரிவினைகளை ஏற்று ஆரிய வேதக்கருத்துகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டு இயற்றப்பட்டிருக்கிறது.
'அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தா னிடை'. என்னும் குறளில் சிவிகையில்(பல்லக்கில்) செல்பவர்கள் அறச்செயல் செய்தவர்கள். சிவிகையைச் சுமப்பவர்கள் பாவம் செய்தவர்கள் என்று அறத்தின் பெருமையை விளக்குகின்றார் பரிமேலழகர்.
ஆனால் சிவிகையைச் சுமப்பவனுக்கும், சுமந்து செல்பவனுக்கும் அறம் ஒன்று என்று இந்த நூலின் உரை ஆசிரியர் குறிப்பிடுவதுதான் சரியென்று தோன்றுகிறது. ஒருவன் அவனது முந்தையப்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் காரணமாய் சிவிகையைச் சுமந்தும் , பயணம் செய்வதும் என்று சொல்வது ஏற்புடையதாய் இல்லை.எந்தத் தொழிலும் தாழ்வில்லை தானே.
மக்கட்பேறு அதிகாரத்தில் 'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ் ' என்ற குறளில் சிறுகுழந்தை பிஞ்சுக் கரங்களால் கலக்கி விளையாடிய கூழ் அமிழ்தத்தை விட உயர்ந்தது என்று பதிவிடும் பொழுது வள்ளுவர் தேவர்களுடைய பானமான அமிர்தம் உயர்வானதல்ல என்று கூறுவதையே ஆசிரியர் தன்னோட கருத்தாய்த் தெரிவிக்கின்றார்.தேவரன்ன கயவர், ஒழுக்கமற்ற தேவர்னு திருக்குறள்ல இருக்கிற பதிவுகளையும் எடுத்துக்காட்டா கூறி விளக்குகின்றார்.
திருக்குறள்-கீதை பற்றிய ஒரு ஒப்புநோக்கு SACP2014 ( society for Asian comparative philosophy conference) என்ற மாநாட்டில் philosophy of peninsular India என்ற தலைப்பில் நியூயார்க்கில் ஏற்கப்பட்டு, திருக்குறளோட புகழை உலகறியச் செய்திருக்கிறார் ஆசிரியர். அந்தக் கட்டுரையின் தமிழாக்கம் இந்தநூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டுள்ளது. திருக்குறளோட அறத்துப்பால் உள்ள 38 அதிகாரங்களுக்கு இந்ந நூலில் தெளிவுரை விளக்கப்பட்டிருக்கிறது.
இந்தநூலின் இன்றைய தேவை : உலகளவில் இந்திய சிந்தனையியல் (INDOLOGY) பற்றிய நூல்கள் பெரும்பாலும் உபநிடதங்கள், கீதை, இராமாயணம், மகாபாரதம் என்ற வேதமரபிலான சிந்தனைகளே ஆகும். தமிழ் தொன்மொழி, அதன் நூல்களை தாங்கள் மொழியில் மாற்றி, பின்னர் மூலநூல்களை வேதமரபினர்அழித்து விட்டனர் என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது சரியானதே. இந்த நூல் கீதை, மநுதர்மம் ஆகியநூல்கள் திருக்குறள் கருத்துகளை ஏற்று திரிபு செய்யப்பட்டது என்பதை விளக்கும். மேலும் இந்திய சிந்தனையியல் வளர்ச்சியில் தமிழின் தனித்துவம் ஓரளவு விளங்கும்.வடமொழி மட்டுமே தனித்துவம் பெற்றது என்ற தவறான வாதத்தை இந்நூல் முறியடிக்கிறது.

No comments:
Post a Comment